22nd September 2020
Daily Latest Tamil News

ரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்!

சென்னை: அரசியல் பிரச்சாரத்தின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்த ஆச்சி மனோரமாவின் ஃபிளாஷ்பேக் கதை நம்ம ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் நினைவுப்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தபோது நடிகை மனோரமா ‘தலைவர்ர்ர்’ என கலாய்த்ததாகவும், அதன் பின்னர், 1000 படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமாவையே சினிமா உலகம் பிளாக் லிஸ்ட் பண்ண கதையையும், இந்த பிரச்சனையை விஜயகாந்த் எப்படி கேப்டன் கூலாக செயல்பட்டு முடித்து வைத்தார் போன்ற பல விஷயங்களை நம்ம ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.


Rewind Raja: How Vijaykanth handled the Rajinikanth and Aachi Manorama clash!

யாருமே மனோரமாவுக்கு கை கொடுக்காத நிலையில், சின்ன கவுண்டர் விஜயகாந்த், நான் போய் பேசுறேன் என ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று நடிகர் ரஜினிகாந்தை விஜயகாந்த் சந்தித்துள்ளார்.

விஜயகாந்தை பார்த்தவுடன், வாங்க விஜி என்ன விஷயம் என கேட்க, இருவரும் கேரவனில் அமர்ந்து இந்த பிரச்சனை பற்றி ஆலோசித்துள்ளனர்.

நீங்க சொன்னா சரியா இருக்கும், என விஜயகாந்த் சொன்ன யோசனைக்கு மறு பேச்சே பேசாமல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்து மீண்டும் ஆச்சி மனோரமாவை தனது அருணாச்சலம் படத்தில் நடிக்க வைத்தார்.

கருப்பு எம்.ஜி.ஆர் என சும்மா ஒண்ணும் கேப்டன் விஜயகாந்தை புகழவில்லை என்பதற்கு இந்த ஒரு பிளாஷ்பேக் நிகழ்ச்சியும் முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மேலும், chubby-ஆ தான் சாதிச்சோம் வீடியோவில் அஜித்தின் அமராவதி கதை பற்றி என்ன சொல்றாங்க என வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!


Source: filmibeat.com

Related Something You Missed!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!

admin

முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவின் முக்கிய பிரமுகர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

admin

தல61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! 13 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி

admin

Exclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன?.!பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..! அலறும் அதிமுக..!

admin

அடுத்து எதிர்க்கட்சி வரிசைக்கூட கிடைக்காது… துரோகி வரிசைதான் அடிமைகளே… அதிமுகவை பங்கம் செய்த உதயநிதி..!

admin

வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு… அதிமுக எம்.பி. எதிர்ப்பு… அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்..?

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil