22nd September 2020
Daily Latest Tamil News

சொந்தங்கள் சூழ.. பிரபல நடிகை திடீர் திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்.. திரையுலகம் வாழ்த்து!

கொச்சி: பிரபல நடிகை மியா ஜார்ஜ் திருமணம் இன்று பிற்பகல் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர், மலையாள நடிகை மியா ஜார்ஜ்.

அடுத்து, விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மியா ஜார்ஜ். பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், டிரைவிங் லைசன்ஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல் உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

தமிழில் இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடை பட்டுள்ளது. இவருக்கும் அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் பேசி முடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் தேவாலயம் ஒன்றில் நடந்தது.

தேதி முடிவாகவில்லை

தேதி முடிவாகவில்லை

இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இவர்கள் திருமணம் இந்த மாதம் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், ‘தேதி முடிவாகவில்லை, கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் திருமணத்தை எப்போது, எப்படி நடத்துவது என்பது பற்றிய குழப்பத்தில் இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன் மியா ஜார்ஜ் கூறியிருந்தார்.

திருமண சடங்குகள்

திருமண சடங்குகள்

இந்நிலையில், இவர்கள் திருமணம் எர்ணாகுளத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று நடந்துள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு திருமண சடங்குகள் தேவாலயத்தில் தொடங்கின. இதில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். கொரோனா பரவல் காரணமாக அதற்கான நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு திருமணம் நடந்தது.

விருந்து நிகழ்ச்சி

விருந்து நிகழ்ச்சி

இதையடுத்து அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் திருமணத்துக்காக, அவர் தோழிகள் சில நாட்களுக்கு முன் விருந்து கொடுத்தனர். இந்த விருந்து நிகழ்ச்சியில், மியாவுக்கு அவர்கள் பரிசுகளை கொடுத்து வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை மியா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்னதாக வெளியிட்டிருந்தார்.


Source: filmibeat.com

Related Something You Missed!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!

admin

முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவின் முக்கிய பிரமுகர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

admin

தல61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! 13 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி

admin

Exclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன?.!பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..! அலறும் அதிமுக..!

admin

அடுத்து எதிர்க்கட்சி வரிசைக்கூட கிடைக்காது… துரோகி வரிசைதான் அடிமைகளே… அதிமுகவை பங்கம் செய்த உதயநிதி..!

admin

வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு… அதிமுக எம்.பி. எதிர்ப்பு… அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்..?

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil