இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணீயும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

எனவே தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 16ம் தேதி (புதன்கிழமை) நடக்கவுள்ளது. அந்த போட்டியில் களமீறங்கும் உத்தேச அணிகளை பார்ப்போம். 

இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 2வது போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் தான் கடைசி போட்டியிலும் அந்த அணி ஆடும். இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்வதற்கான தேவை ஏதும் இல்லை. 

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர். 

ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டிக்கு முந்தைய பயிற்சியில் தலையில் அடிபட்டதால் முதல் போட்டியில் ஆடாத ஸ்டீவ் ஸ்மித், இரண்டாவது போட்டிக்கு முன்பாக கன்கசன் டெஸ்ட்டில் தேறினாலும், முன்னெச்சரிக்கை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. கடைசி போட்டியில் வென்றால்தான் தொடரை வெல்ல முடியும் என்பதால், கடைசி போட்டியில் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மித் அணிக்குள் வரும்பட்சத்தில், அவரது 3ம் வரிசையில் இறங்கிவந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் நீக்கப்படுவார். அந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் ஆஸ்திரேலிய அணியில் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.