உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(30). கதிர் அறுக்கும் இயந்திரம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளியூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன், மனைவி எழிலரசி(28). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.  2  குழந்தையுடன் தனியாக வசித்து வந்த எழிலரசிக்கு ஹலோ ஆப் என்ற இணையதளத்தின் மூலம் ராமதாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான ராமதாஸ் கடந்த ஒரு ஆண்டாக எழிலரசியிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்ததால் அடிக்கடி எழிலரசியுடன் வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து ராமதாஸ் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

வழக்கம் போல கடந்த 10ம் தேதி வேளாங்கண்ணிக்கு ராமதாஸ் வந்துவிட்டார். ஆனால், எழிலரசி காலதாமதமாக வந்துள்ளார். பின்னர் இருவரும் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். எழிலரசி காலதாமதமாக வந்ததால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் குழந்தை மனுஸ்ரீயை ராமதாஸ் உதைத்துள்ளார்.

 மறுநாள் 11ஆம் தேதி ராமதாசும், எழிலரசியும் உல்லாசமாக இருந்த போது குழந்தை தொந்தரவு செய்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராமதாஸ் குழந்தை மனுஸ்ரீயை வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில், குழந்தை மனுஸ்ரீ மயக்கமடைந்தது. இதனையடுத்து, இருவரும் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். 

இதனால், பயந்துபோன இருவரும் குழந்தை உடலை வாங்காமல் அங்கிருந்து வேளாங்கண்ணி விடுதிக்கு சென்றனர். பின்னர், விடுதியை காலி செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து செல்ல 2 பேரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இருவரும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதையடுத்து நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்த சிறையில் அடைத்தனர்.