22nd September 2020
Daily Latest Tamil News

சர்ச்சை இயக்குனருடன் கூட்டு சேரும் துருவ் விக்ரம்.. மூன்றாவது படத்திலேயே முன்னணி நடிகராக துடிக்கிறாராம்!


சர்ச்சை இயக்குனருடன் கூட்டு சேரும் துருவ் விக்ரம்.. மூன்றாவது படத்திலேயே முன்னணி நடிகராக துடிக்கிறாராம்!

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார்.

ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியான இந்தப்படம் மண்ணைக் கவ்வியது. இருந்தாலும் அந்த படத்தில் நடிப்புக்கு துருவ் விக்ரமுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந்நிலையில் அடுத்ததாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்ததாக தமிழ் சினிமாவின் சமீபத்திய சர்ச்சை இயக்குனராக மாறியுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படமும் பரியேறும் பெருமாள் படத்தைப் போல ஒரு குறிப்பிட்ட சாதியினரை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

அதே போல் விக்ரம் தன்னுடைய மகனுக்கு ஒரு படம் வேண்டும் என அவரைக் கேட்டுக் கொண்டதால் அடுத்த படத்தை அவரை வைத்து இயக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் விக்ரம் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

எப்படியாவது தன்னுடைய மகனை முன்னணி நடிகராக மாற்றி விட வேண்டும் என விக்ரம் தவிக்கும் தவிப்பு கொஞ்ச நஞ்சமல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.


Source: cinemapettai.com

Related Something You Missed!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!

admin

முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவின் முக்கிய பிரமுகர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

admin

தல61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! 13 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி

admin

Exclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன?.!பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..! அலறும் அதிமுக..!

admin

அடுத்து எதிர்க்கட்சி வரிசைக்கூட கிடைக்காது… துரோகி வரிசைதான் அடிமைகளே… அதிமுகவை பங்கம் செய்த உதயநிதி..!

admin

வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு… அதிமுக எம்.பி. எதிர்ப்பு… அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்..?

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil