10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, அவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை செய்தார் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார் என தமிழக சட்டப்பேரவையில் கருணாஸ் எம்.எல்.ஏ. புகழாரம் சூட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் மார்ச் 24ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போன நிலையில் இதனை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளில்  ஆல்பாஸ் செய்ததோடு மட்டுமின்றி அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து அதிரடி அறிவிப்பை முதல்வர் எடப்பாடி வெளியிட்டு அசத்தினார். 

இந்நிலையில், சட்டப்பேரவையில் 3வது நாளான இன்று எம்எல்ஏ கருணாஸ் பேசுகையில்;- 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, அவர்கள் வேண்டிய எந்த சாமியும் செய்யாததை செய்தார் எடப்பாடி பழனிசாமி. அரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார். 4 ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் என்றும் 40 ஆண்டு அத்திவரதரையும் பார்த்துவிட்டீர்கள், நாற்றங்காலும் நட்டு விட்டீர்கள் என்று புகழ்ந்து பேசினார்.