19th September 2020
Daily Latest Tamil News

மாணவர்கள் கல்லறை மீது ஏறி நின்று அரசியல் செய்யாதீர்கள்.. அதிமுக எம்எல்ஏ இன்பதுரை ஆவேசம்

சென்னை: நீட் தேர்வு அவசியம் இல்லை, அதற்காக ஒரு அவசர தீர்மானத்தை இயற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து நான் விரிவாக பேச வேண்டியிருக்கிறது. நீட் எவ்வாறு வந்தது, எப்படி வந்தது?

அக்டோபர் 21ம் தேதி, 2010ம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்த, திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் காங்கிரஸ் அரசால் நீட் கொண்டுவரப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டத்திற்கு, அப்பொழுது அந்த கூட்டணியில் அங்கம் வகித்த திராவிட முன்னேற்றக் கழகம் முட்டுக் கொடுத்ததா, இல்லையா? இது தான் என்னுடைய கேள்வி.

பாவம்யா… 700 கிமீ தாண்டி வந்த மாணவனுக்கு நீட் எழுத அனுமதி மறுப்பு… காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

தமிழக மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தார்கள். இது தொடர்பாக நிறைய வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது. நமக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஆனால் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன் விளைவாக நிலைமை மோசமடைந்தது. 19.7.2015ல், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் வந்தபோது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

திமுக எதிர்க்கவில்லை

திமுக எதிர்க்கவில்லை

அதற்குப் பின்பு 2016ல் மாநிலங்களவையில் இந்த சட்டம் குறித்து விவாதம் வந்தபோது திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் இருந்தார்கள். யாரும் எதிர்க்கவில்லை. வெளிநடப்பு செய்யவில்லை. டிவிஷன் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் உங்கள் எதிர்ப்பு பதிவாகியிருக்கும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு மாணவர்கள் கல்லறை மீது ஏறி நின்று, அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களானால், கோயபல்ஸ் கூட உங்களை பார்த்து வெட்கப்பட்டு விடுவாரா இல்லையா?

நீட் நடைபெறவில்லை

நீட் நடைபெறவில்லை

திமுக ஆதரவோடு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது தான் நீட். ஆளும் அதிமுக அரசு இதில் என்ன செய்தது என்று நீங்கள் கேள்வி எழுப்புகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்கள் நலனுக்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். ஜெயலலிதா இருக்கும் போது தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவில்லை. 2016 ஆம் ஆண்டு நீட்தேர்வு வந்த போது அதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது திமுகவின் டெல்லி நண்பராக இருக்க கூடியவரின் மனைவி, உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று ஆதரவாக வாதாடினார். துருப்பிடித்த ஆயுதங்களைக் கொண்டுவந்து, போரிட்டு, வரலாற்றை திரிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உச்ச நீதிமன்றத்திற்கு சென்று ஒரு நல்ல வாய்ப்பு கெடுத்து விட்டீர்கள்.


Source: Oneindia.com

Related Something You Missed!

ஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா? ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா!

admin

96 சிறந்ததா.. ஜானு சிறந்ததா.. இதுல எது பெஸ்ட்.. உங்க ஒப்பீனியன சொல்லணுங்க !

admin

‘சக நடிகையையே நம்ப முடியாதது வேதனை..’ பிரபல நடிகையை விளாசித் தள்ளிய ரேவதி ரீமா ரம்யா நம்பீசன்!

admin

காற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

admin

நாட்டின் ஒரே நம்பிக்கை.. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது.. நடிகர் சூர்யா நன்றி!

admin

Vetrimaaran’s Pigeon Loft | Pigeon Race

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil