22nd September 2020
Daily Latest Tamil News

மறுபடியும் உங்கள் நான்.. கமல் போட்ட ட்வீட்.. வேற லெவலில் டிரெண்டாகும் #KamalHaasan232

சென்னை: உலக நாயகன் ரசிகர்களின் உள்ளங்கையில் உள்ள செல்போன்களில் எல்லாம் இப்போ விஸ்வரூபம் படத்தில் வரும் “எவனென்று நினைத்தாய்.. எதைக் கண்டு சிரித்தாய்” பாடல் ஒலிக்கிறதோ இல்லையோ.. கமல்ஹாசனின் 232வது படத்தின் டைட்டிலை கேட்ட உடனே நிச்சயம் அனைவரது வாயும் அந்த பாடலை முணுமுணுக்க தொடங்கி இருக்கும்.

லோகேஷ் கனகராஜின் ஆண்டவருக்கு நன்றி ட்வீட்டை தொடர்ந்து, கமல்ஹாசன் போட்ட மறுபடியும் உங்கள் நான் ட்வீட் வேற லெவலில் டிரெண்ட் ஆகி வருகிறது.

மறுபடியும் உங்கள் நான்

மறுபடியும் உங்கள் நான்

மற்றுமொரு தொடக்கம் ஆரம்பம் என்றும், மறுபடியும் உங்கள் நான் என நடிகர் கமல்ஹாசன் ‘எவனென்று நினைத்தாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்து போட்ட ட்வீட்டை ஏகப்பட்ட ரசிகர்கள், பிரபலங்கள் ஷேர் செய்து, தங்களின் எதிர்பார்ப்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ராக்ஸ்டார் ஹேப்பி

ராக்ஸ்டார் ஹேப்பி

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து உலக நாயகன் உடன் இணைந்து எவனென்று நினைத்தாய் படத்திற்கும் இசையமைக்கப் போவது நம்ம ராக்ஸ்டார் அனிருத் தான். அதே போல மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் வொர்க் பண்ணுவதில் ரொம்ப சந்தோஷம் என தெரிவித்துள்ளார் அனிருத்.

ரசிகனின் மிகப்பெரிய சாதனை

ரசிகனின் மிகப்பெரிய சாதனை

மாஸ்டர் அப்டேட் விடாமல் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுறீங்களே என ரசிகர்கள் சார்பாக லோகேஷ் கனகராஜ் உடன் செல்லமாக சண்டை போட்ட நம்ம ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், ஒரு ரசிகனின் மிகப்பெரிய சாதனை என்றும், வாழ்த்துக்கள் மச்சி.. எண்ணம் போல் வாழ்க்கை என்றும் வாழ்த்தி தள்ளி உள்ளார். அந்த புராஜெக்ட்டுக்கும் நீங்க அப்டேட் தருவீங்களா பாஸ்!

பார்த்திபன் பாராட்டு

பார்த்திபன் பாராட்டு

#KamalHaasan232 என்ற ஹாஷ்டேக் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் Congratulations என பாராட்டி உள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கமல்ஹாசனின் 232வது படத்திற்கு தங்களது எதிர்பார்ப்புகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மிகப்பெரிய வாய்ப்பு

மிகப்பெரிய வாய்ப்பு

மூன்று படங்களை மட்டுமே இயக்கி உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 4வது படமே கமலை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பதை அறிந்த திரையுலகினர் அந்த திறமையான இளம் இயக்குநரை வாழ்த்தி வருகின்றனர். சும்மாவே தனது படங்களில் கமல் ரெஃபரன்ஸ் இருக்கும், கமலை வைத்தே படம் இயக்குகிறார் என்றால் மனுஷன் என்ன பண்ணப் போகிறாரோ என எக்ஸ்பெக்டேஷன்ஸ் எகிறுகிறது.

அப்போ இந்தியன் 2?

அப்போ இந்தியன் 2?

அடுத்த மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக உள்ள கமல்ஹாசன், கூடவே எவனென்று நினைத்தாய் படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்றும், இந்தியன் 2வுக்கு முன்பே இந்த படம் வெளியாக உள்ளது குறித்தும் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Source: filmibeat.com

Related Something You Missed!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!

admin

முன்னாள் எம்எல்ஏவும், அமமுகவின் முக்கிய பிரமுகர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

admin

தல61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! 13 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி

admin

Exclusive:டிடிவி தனிவிமானத்தில் டெல்லி பயணம் நடந்தது என்ன?.!பாஜக போட்ட கண்டிசன் இதுதானாம்..! அலறும் அதிமுக..!

admin

அடுத்து எதிர்க்கட்சி வரிசைக்கூட கிடைக்காது… துரோகி வரிசைதான் அடிமைகளே… அதிமுகவை பங்கம் செய்த உதயநிதி..!

admin

வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு… அதிமுக எம்.பி. எதிர்ப்பு… அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்..?

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil