தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ. காளியப்பன். இவருடைய மகள் கே.ஏ.கே. செல்வம். தமிழக மருந்து விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவராக இவர் உள்ளார். இந்நிலையில் கே.ஏ.கே. செல்வம் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஏற்பாட்டின் பேரில் கே.ஏ.கே. செல்வம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.