22nd October 2020
Daily Latest Tamil News

‘சக நடிகையையே நம்ப முடியாதது வேதனை..’ பிரபல நடிகையை விளாசித் தள்ளிய ரேவதி ரீமா ரம்யா நம்பீசன்!

கொச்சி: பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் சக நடிகை திடீரென பல்டி அடித்ததை நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் விளாசியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகை ஒருவர், கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து வந்த நடிகை அவர்.

சாட்சிகள் விசாரணை

சாட்சிகள் விசாரணை

இதில் தொடர்புடையதாகக் கூறி, மலையாள நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்போது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

நடிகை பாமா, சித்திக்

நடிகை பாமா, சித்திக்

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் பின்னர் பல்டி அடித்தனர். மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியை ஒட்டி நடந்த ஒத்திகையின் போது நடிகர் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தாங்கள் பார்த்ததாக நடிகை பாமாவும், நடிகர் சித்திக்கும் முதலில் போலீசாரிடம் தெரிவித்தனர்.

தங்களுக்கு தெரியாது

தங்களுக்கு தெரியாது

இதனால் இவர்கள் போலீஸ் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் நேற்றுமுன் தினம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரியாது என்று கூறியதால், பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.

நடிகை ரேவதி விளாசல்

நடிகை ரேவதி விளாசல்

இந்நிலையில் நடிகை ரேவதி, இதுகுறித்து நடிகை பாமாவை விளாசியுள்ளார். ‘சினிமா துறையில் சக கலைஞர்களையே நம்ப முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. பல படங்களில் ஒன்றாக நடித்த கலைஞர்கள், ஒரு பெண்ணுக்கு பிரச்னை என்று வந்ததும் பின்வாங்கி விடுகின்றனர். பணியாற்றியபோது நட்பாக பழகிய ஞாபகங்கள் கூட அவர்களுக்கு இல்லை.

காரணம் தெரியும்

காரணம் தெரியும்

2017 ஆம் ஆண்டு நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் இடைவேளை பாபு, பிந்து பணிக்கர் உட்பட சிலர் நீதிமன்றத்தில் சாட்சியத்தை மாற்றி அளித்ததில் ஆச்சரியமில்லை. அதற்கான காரணம் தெரியும். தற்போது நடிகர் சித்திக், மாறியதற்கும் என்ன காரணம் என்று தெரியும்.

நம்பவே முடியவில்லை

நம்பவே முடியவில்லை

ஆனால் பாதிக்கப்பட நடிகைக்கு நெருக்கமாக இருந்த பாமா, வாக்குமூலத்தை மாற்றிச் சொன்னதை நம்பவே முடியவில்லை. தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பெண், இத்தனை வருடங்களாக நீதி கிடைக்கும் என்றே போராடி வருகிறார். இந்த புகார் தொடர்பாக அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ளாதது ஏன்? என்று ரேவதி குறிப்பிட்டுள்ளார்.

ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்

இதற்கு நடிகைகள் ரீமா கல்லிங்கலும் ரம்யா நம்பீசனும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ரீமா கல்லிங்கல், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நின்ற சக கலைஞர் திடீரென மாறியிருப்பதும் உதவி தேவைப்படும் நேரத்தில் இப்படி மாற்றி சொல்லி இருப்பதும் வேதனை அளிக்கிறது என்று ரீமா தெரிவித்துள்ளார்.


Source: filmibeat.com

Related Something You Missed!

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பில் செல்போன்கள் திருட்டு சம்பவம்; கொட்டும் மழையில் நள்ளிரவில் ஐஜி ஆய்வு

admin

அடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்

admin

எம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது

admin

கல்லூரி படிப்பிற்கு நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது… மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்..!

admin

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்கான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு..!!

admin

இதுதான் நீட் தேர்வின் நிஜ முகம்.. தமிழகத்தில் ஜஸ்ட் 8 அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் சீட்

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil