22nd October 2020
Daily Latest Tamil News

ஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா? ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா!

மும்பை: உணவளித்த கையையே கடிப்பதாக தன்னை விமர்சித்த ஜெயா பச்சனுக்கு நடிகை கங்கனா ரனாவத் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையில் பாலிவுட்டில் போதை பொருள் புழக்கம் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி மற்றும் ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயா பச்சன் கருத்து

ஜெயா பச்சன் கருத்து

போதை பொருள் விவகாரத்தில் இன்னும் பல திரைத்துறை பிரபலங்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கும் வந்தது. மாநிலங்களவையில் பேசிய நடிகையும் எம்பியுமான ஜெயா பச்சன், ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பாலிவுட் சினிமாவையும் தவறாக பேசக்கூடாது என்றார்.

கையை கடிக்கிறார்கள்

கையை கடிக்கிறார்கள்

பாலிவுட்டால் பெயர் வாங்கியவர்களே அதை சாக்கடை என்கிறார்கள், சோறு போடும் கையை அவர்கள் கடிக்கிறார்கள் என கங்கனாவை மறைமுகமாக சாடியிருந்தார் ஜெயா பச்சன். ஜெயாப்பச்சனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.

படுக்கையை பகிர்ந்த பின்

படுக்கையை பகிர்ந்த பின்

இந்நிலையில் ஜெயாப்பச்சனின் பேச்சுக்கு கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட அவர், ‘எந்த வாய்ப்பை பற்றி குறிப்பிடுகிறீர்கள் ஜெயா ஜி? ஹீரோவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டபின் இரண்டு நிமிட கதாபாத்திரங்களையும், ஒரே ஒரு பாடலையும், ஒரு காதல் காட்சியையும், ஐட்டம் டான்ஸ்களை கொடுக்கிறார்களே அதை பற்றியா?

பெண்ணியத்தை கற்றுக்கொடுத்தேன்

பெண்ணியத்தை கற்றுக்கொடுத்தேன்

என்னுடைய திரை வாழ்க்கையில் இதில் இருந்து தப்பிக்க, நான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசபக்தி திரைப்படங்களில் நடித்து என் தட்டை நானே அலங்கரித்தேன். திரைத்துறைக்கு நான் தான் பெண்ணியத்தை கற்றுக் கொடுத்தேன். நீங்கள் அல்ல.

கருணை காட்டுங்கள்

கருணை காட்டுங்கள்

இதுவே ஜெயா பச்சனின் மகள் ஸ்வேதா, துன்புறுத்தப்பட்டால் அல்லது மகன் அபிஷேக் கொடுமைப்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது பிணம் கண்டுபிடிக்கப்பட்டால் ஜெயா பச்சன் இப்படி பேசுவாரா? கொஞ்சம் கருணைகாட்டுங்கள் ஜி என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கங்கனா மீது விமர்சனம்

கங்கனா மீது விமர்சனம்

பாலிவுட்டின் முகத்திரையை கிழித்து வரும் கங்கனாவுக்கு சில பாலிவுட் பிரபலங்களும் பாலிவுட் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கங்கனாவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளார்கள். கங்கனாவை தரக்குறைவாகவும் விமர்சித்து வருகின்றனர்.

அப்படி எதிர்பார்க்கிறார்கள்

அப்படி எதிர்பார்க்கிறார்கள்

இதனிடையே அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷுட்டிங் செட்டில் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஹீரோயின்கன் தங்களின் மனைவியை போன்று நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Source: filmibeat.com

Related Something You Missed!

ராஜமெளலி இயக்கும் ஆர்ஆர்ஆர்: ஜூனியர் என்டிஆர் வேடத்தின் முதல் தோற்ற விடியோ வெளியீடு

admin

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்; குண்டர் சட்டம் பாயும்: முதல்வர் எச்சரிக்கை

admin

புதுச்சேரி ‘சண்டே மார்க்கெட்’ இனி காந்தி வீதியில் இயங்காது: ரயில்வே நிலையச் சாலைக்கு மாற்றம்

admin

ஆம்பூரில் வட்டார அளவிலான குறைதீர்வு கூட்டம்; ரூ.5.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்

admin

பேரணாம்பட்டு ஏடிஎம் மையத்தில் கறை படிந்த ரூபாய் நோட்டுக்கள் விநியோகம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

admin

போலீஸ் போன்று நடித்து நகை பறிக்கும் கும்பல்: மதுரை நகரில் தனியாக செல்ல பெண்கள் அச்சம்

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil