22nd October 2020
Daily Latest Tamil News

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது: பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சனம்

l-murugan-about-stalin

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்ன என்பதே தெரியாது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு திரித்து கூறுவதும், அரசியலாக்குவதையும் தான் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத ஸ்டாலின் வேளாண் மசோதாக்கள் குறித்து பேச அருகதையே இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின் ஒரு விவசாயியே இல்லை. அவருக்கு விவசாயம் என்றால் என்ன என்பதே தெரியாது.

கூட்டணியில் தொடர்கிறோம்

ரஜினி கட்சி ஆரம்பித்தால் வரவேற்போம். யார் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் அரவணைப்போம். தற்போது வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்கிறோம். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் இடையே விரிசல் இருப்பதாக தெரியவில்லை. பெரியாரின் நல்ல கொள்கையை யார் கூறினாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் கடவுள் இல்லை என்பதை ஏற்க முடியாது என்றார்.


Source: Hindutamil.in

Related Something You Missed!

பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் வாங்க குவிந்த கூட்டம் – மணிக்கணக்கில் காத்திருப்பு

admin

அக். 22 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

admin

தமிழகத்தில் பள்ளிகள். தியேட்டர்கள் திறப்பு எப்போது? பல தளர்வுகள் வரப்போகிறது.. 28ல் முதல்வர் ஆலோசனை

admin

இந்தாண்டு தமிழக மக்கள் பயம் இல்லாமல் இருக்கலாம்..!! சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன குட் நியூஸ்..!

admin

இன்று முதல் மீண்டும் ‘வலிமை’ படப்பிடிப்பு: அஜித் கலந்து கொள்கிறாரா?

admin

சமூகவலைத்தளங்களில் மீண்டும் இணைந்தார் சிம்பு

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil