22nd October 2020
Daily Latest Tamil News

தல61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! 13 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி


தல61 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! 13 வருடத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் கூட்டணி

தல அஜித் தற்போது நடித்து வரும் வலிமை படம் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்புகளுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் தல61 படத்திற்காக அஜித் இயக்குனரை தேர்வு செய்து விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக அஜித் இளம் திறமையான இயக்குனர்கள் உடன் களமிறங்குவதில் ஆர்வமாக இருக்கிறார். பழைய கமர்சியல் பார்முலாக்களை அடியோடு ஒதுக்கிவிட்டு புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்.

அந்த வகையில் வினோத் இயக்கத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக மாறியுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் தல61 படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாம்.

ஏற்கனவே அஜீத் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான கிரீடம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Source: cinemapettai.com

Related Something You Missed!

பீகார் தேர்தலில் பாஜக வென்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா ஊசி..!

admin

பொங்கல் பண்டிகை ரிலீஸ்.. விஜய்யின் மாஸ்டருடன் மோதும் 3 படங்கள்.. ரெடியாகும் பிரபல ஹீரோக்கள்!

admin

கொரோனா பாதிப்பு.. அப்பா நன்றாக இருக்கிறார் வதந்தி பரப்ப வேண்டாம்.. பிரபல ஹீரோ மகள் திடீர் ட்வீட்!

admin

சூரப்பாவுக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்..!! அண்ணா பல்கலைகழகம் தமிழக மக்களின் சொத்து- AIYF முழக்கம்.

admin

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பில் செல்போன்கள் திருட்டு சம்பவம்; கொட்டும் மழையில் நள்ளிரவில் ஐஜி ஆய்வு

admin

அடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்

admin
TAMIL IDHAL
A Collective Daily News in Tamil