சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார். 

இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.

அதேபோல், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பேசிய  ஷிகார் தாவன் கூறுகையில் : 13 வருடங்கள் கழித்து இன்று  சதத்தை அடித்து மிகவும் ஸ்பெஷல் ஆக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி உணர்கிறேன் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து நான் பந்துகளை சிறப்பாக அடித்து வருகிறேன். 20 முதல் 30 ரன்கள் அடிக்கும் போது அதனை நான் 50 ரன்களாக மாற்ற முடியாமல் போனது. ஆனால் இம்முறை அதிக நம்பிக்கை என்னிடம் இருந்தது.

அதனால் அதனை அப்படியே கொண்டு செல்ல விரும்பினேன். என்னுடைய மன நிலையும் தெளிவாக இருந்தது. இந்த மைதானத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்றார்போல் எனது பேட்டிங்கை வெளிப்படுத்தினேன். அதன் விளைவாக இன்று நான் சதத்தை அடித்து உள்ளேன் என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.